Sunday, August 3, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடல்

மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடல்

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிற்கும் மின்சார தொழிற்சங்கங்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அமைச்சு வளாகத்தில் நேற்று (12) பிற்பகல் கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், இலங்கை மின்சார சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தொழிற்சங்கங்களும் இதில் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் இங்குள்ள தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்துள்ளார்.

அமைச்சர் முன்வைத்த சில விடயங்கள் தொடர்பில் தொழிற்சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மறுசீரமைப்பு தொடர்பான எதிர்கால நடவடிக்கைகளில் தொழிற்சங்கங்களின் முன்மொழிவுகளை கலந்தாலோசிக்குமாறும் அங்குள்ள தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles