Saturday, January 31, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதன் உயிரை மாய்த்துக் கொண்ட விமானப்படை வீரர்

தன் உயிரை மாய்த்துக் கொண்ட விமானப்படை வீரர்

கலென்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிகோரிஸ் பாலத்திற்கு அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு விமானப்படை வீரர் ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

கலென்பிந்துனுவெவ, ஹுருலுனிகாவெவ பிரதேசத்தைச் சேர்ந்த கலும் சஞ்சீவ குமார என்ற 33 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 11 ஆம் திகதி அன்று வார இறுதி விடுமுறையில் வீடு திரும்பிய அவர், நேற்று இரவு 9.30 மணியளவில் தனது நண்பரை சந்திக்க போவதாக மனைவியிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றுள்ளார்.

பின்னர் கணவர் வீடு திரும்பாத காரணத்தினால் அவரின் மனைவி பொலிஸில் முறைப்பாடளிக்க சென்றபோது, அவரது ​​கணவன் தற்கொலை செய்துகொண்டமை தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles