சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் தேசிய ஒளடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் தலைவர் ஆகியோரை நாளை மறுதினம் (15) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய ஒளடத தட்டுப்பாடு, விலை அதிகரிப்பு மற்றும் சத்திர சிகிச்சைகள் மட்டுப்படுத்தப்படல் போன்றவற்றால் மக்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக வைத்தியர் மற்றும் பொது உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்க சம்மேளனம் மற்றும் இலங்கை வைத்திய சங்கம் என்பன முறைப்பாடு செய்திருந்தன.
இந்த முறைப்பாடு தொடர்பிலே குறித்த மூவருக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், வரித்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மற்றும் தனியார் வங்கி சேவையாளர்களும் கறுப்பு ஆடை அணிந்து இன்று சேவையில் ஈடுபட்டுள்ளனர்.