அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக கடமையாற்றிய போது அதன் வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
10 லட்சம் ரூபா மதிப்புடைய இரண்டு சொந்த பிணையில் செல்ல அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அபிவிருத்தி லொத்தர் சபைக்கு சொந்தமான மூன்று வாகனங்களை 2006 ஓகஸ்ட் முதலாம் திகதி தொடக்கம் 2007 ஜூலை 31 ஆம் திகதி வரையில் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு அதன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் 24 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்படுத்தியதாக சரண குணவர்தனவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கு மே 8ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.