ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ”நாட்டு நாட்டு” பாடல் சிறந்த பாடலுக்கான ஒஸ்கார் விருதை தட்டித் தூக்கியது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில், திரையுலகின் மிக உயிரிய விருதான ஒஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
95வது ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில், ‘ஆர்.ஆர்.ஆர்´ படத்தின் ´நாட்டு நாட்டு´ பாடலை பாடிய கால பைரவா, ராகுல் சிப்ளிகஞ்ச் பாடலின் Famous Steps-க்கு நடன கலைஞர்கள் நடனமாடி அரங்கில் இருந்தவர்களை குஷிப்படுத்தினர்.
பாடலுக்கான ஒஸ்கர் விருதை பாடலாசிரியர் சந்திரபோஸ் மற்றும் இசை அமைப்பாளர் கீரவாணி ஆகியோர் பெற்றனர்.
நாட்டு நாட்டு பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் விருதை வென்றிருந்தது.
ஏ.ஆர்.ரகுமானுக்கு பிறகு ஒஸ்கர் விருதைப் பெற்ற இரண்டாவது இந்திய இசையமைப்பாளர் கீரவாணி என்பது குறிப்பிடத்தக்கது.