Friday, April 10, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇன்று கனமழை பெய்யக்கூடும்

இன்று கனமழை பெய்யக்கூடும்

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இடைக்கிடை கன மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களுக்கு 50 மில்லிமீற்றருக்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை ஏற்படலாம்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles