அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஆபாச திரைப்பட நடிகைக்கு வழங்கிய பணம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ட்ரம்ப், 2016 ஜனாதிபதித் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்தபோது இந்த பணம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ட்ரம்பின் வழக்கறிஞர் ஒருவர் ஸ்டோர்மி டேனியல்ஸ் என்ற நடிகைக்கு 130,000 அமெரிக்க டொடலர்கள் வழங்கியுள்ளார்.
ட்ரம்ப் தன்னுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்ததாக ஸ்டோர்மி டேனியல்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன், .இந்த கொடுக்கல் வாங்கல் மிகவும் ரகசியமாக நடத்தப்பட்டதாகவும், ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக பெறப்பட்ட நிதியில் இருந்து குறித்த தொகை அவருக்கு வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக பெறப்பட்ட நிதி தொடர்பாக ஏற்கனவே உள்ள சட்டங்களை மீறியதாகக் கருதப்படும் அமெரிக்க தேர்தல் ஆணையத்திடம் பணம் செலுத்தப்பட்டதை தெரிவிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த சம்பவத்தில் டொனால்ட் ட்ரம்ப்புக்கு தொடர்பு உள்ளதா என்றும், அவர் மீது வழக்கு தொடர வேண்டுமா என்பது குறித்தும் தற்போது முதற்கட்ட சாட்சிய விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த பூர்வாங்க சாட்சிய விசாரணைக்குப் பிறகு ட்ரம்பிற்கு எதிராக வழக்குத் தொடர வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது.
அப்படி ஒரு வழக்கு தொடரப்பட்டால், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒருவர் மீது குற்றவியல் வழக்கு தொடரப்படுவது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
ட்ரம்ப் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சமாக 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்டோர்மி டேனியல்ஸ் ஒரு முன்னாள் ஆபாச நட்சத்திரம். இவரின் உண்மையான பெயர் ஸ்டெபானி கிளிஃபோர்ட்.
2011 ஆம் ஆண்டு ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தனக்கும் டிரம்புக்கும் பாலியல் உறவு இருந்ததாக அவர் முதலில் கூறினார்.
டேனியல்ஸின் கூற்றுப்பட,இ அவர் 2006 இல் ஒரு கோல்ஃப் போட்டியின் போது ட்ரம்பை முதலில் சந்தித்தார்.
பின்னர் அவர்கள் ஒரு குறிப்பிட்ட ஹோட்டல் அறையில் உள்ளாசமாக இருந்ததாக அவர் கூறினார்.
இருப்பினும், தனக்கும் டேனியல்ஸுக்கும் இடையே பாலியல் தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை ட்ரம்ப் மறுத்தார்.
மேலும் ட்ரம்ப் தனது அரசியல் வாழ்க்கையில் மற்றொரு முக்கியமான நேரத்தில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
2024-ம் ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட உள்ளதாக ட்ரம்ப் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதனால் குடியரசு கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யும் போட்டியில் களமிறங்கியுள்ளார்.
#Aruna