நாட்டில் டொலர் பெறுமதியை சடுதியாக வீழ்ச்சியடைய இலங்கை மத்திய வங்கி அனுமதிக்கக்கூடாது என்றும், அவ்வாறு அனுமதிப்பது நாட்டின் பொருளாதாரத்துக்கு மாபெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் டபிள்யு.ஏ. விஜேவர்தன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அரசியல்வாதிகளை சந்தோசப்படுத்துவதற்காக டொலர் பெறுமதி இழப்பை மத்திய வங்கி அனுமதிக்கக்கூடாது.
அவ்வாறு செய்வதன் ஊடாக இறக்குமதி செய்கின்றவர்களுக்கு நன்மையாக இருந்தாலும், வெளிநாடுகளில் பணியாற்றுகின்ற இலங்கையர்கள் உள்ளிட்ட டொலர்களை இலங்கைக்கு அனுப்புகின்றவர்கள் பெருத்த நட்டம் அடைகின்றனர்.
இது இரண்டு முனைகளைக் கொண்ட கத்தியைப் போன்றது, சரியாக கையாளாவிட்டால் நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.