Saturday, July 26, 2025
23.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டு35 இலட்சம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

35 இலட்சம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் 35 இலட்சம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்கள் மற்றும் கூரிய ஆயுதத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இதனை தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபருடன், 700 போலியான 5000 ரூபா தாள் மற்றும் கலர் பிரிண்டர் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஆர்/ 253673053 இலக்கம் கொண்ட 570 நாணயத் தாள்களும், ஆர்/ 247444625 இலக்கம் கொண்ட 114 நாணயத் தாள்களும் போலி நாணயத்தாள்களில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

42 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles