Sunday, April 12, 2026
26.7 C
Colombo
செய்திகள்விளையாட்டுபேட் கம்மின்ஸின் தாயார் காலமானார்

பேட் கம்மின்ஸின் தாயார் காலமானார்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் பேட் கம்மின்ஸின் தாயார் உடல் நலக்குறைவினால் காலமானதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

2005 ஆம் ஆண்டில் துரதிர்ஷ்டவசமாக முதன்முறையாக மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்ட மரியா, கடந்த சில வாரங்களாக உடல் நலக்குறைவினால் பெரிதும் போராடி வந்தார்.

அவரை கவனித்துக் கொள்வதற்காகக் கடந்த மாத இறுதியில் இந்தியாவுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடாது, பேட் கம்மின்ஸ் நாடு திரும்பியிருந்தார்.

இந்நிலையில் அவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

அவரது பிரிவினையடுத்து, பேட் கம்மின்ஸ் குடும்பத்தினர் மற்றும் அவர்களது நணபர்களுக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் அவுஸ்திரேலிய அணி வீரர்கள் கருப்பு பட்டி அணிந்து விளையாடும் என்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles