குறிப்பிட்ட மாதத்துக்கான நீர் கட்டண பட்டியலை அதே மாதத்தில் நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
பல மாதங்களுக்கான நீர் கட்டண பட்டியல்களை ஒரே தடவையில் நுகர்வோருக்கு வழங்குவதால் அவர்கள் சிரமத்துக்குள்ளாவதுடன், கட்டுப்படியாகாத நீர் கட்டணத்தை செலுத்த நேரிடுவதாக அவர் குறிப்பிட்டார்.
மாதாந்தம் நீர் கட்டண வாசிப்பதற்கு தகுதியானவர்கள் இருந்தும், நீர் கட்டண பட்டியல் வழங்குவதில் ஏன் தாமதம் ஏற்படுகிறது என்பது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அதிகாரிகளுடன் நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
இவ்வாறு நீர் கட்டண பட்டியல்களை தாமதமாக வழங்குவதால், புதிய நீர் இணைப்புகளை பெற்றுக் கொண்ட ஏராளமானோரின் நீர் கசிவுகளை அடையாளம் காண முடியாதிருப்பதாக நுகர்வோர் முறைப்பாடளித்திருக்கின்றனர்.