Tuesday, August 5, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதங்க விலை சடுதியாக அதிகரிப்பு

தங்க விலை சடுதியாக அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினத்தை விடவும், இன்றைய தினம், 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, 10 ஆயிரம் ரூபாவால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றமே இந்த திடீர் அதிகரிப்புக்கு காரணமாகும்.

நேற்றைய தினம் ஒரு இலட்சத்து 45 ஆயிரம் ரூபாவாக இருந்த 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, இன்று ஒரு இலட்சத்து 55 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது.

அதேநேரம், 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, இன்றைய தினம் ஒரு இலட்சத்து 42 ஆயிரம் ரூபாவாக உள்ளதென அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் இராமன் பாலசுப்ரமணியம் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles