இந்தியாவில் H3N2 வகை இன்ப்ளூவென்சா வைரஸ் பாதிப்பு காரணமாக 2 பேர் உயிரிழந்தனர்.
முதல் மரணம் கர்நாடக மாநிலத்திலும், 2வது மரணம் அரியானா மாநிலத்திலும் பதிவாகின.
நாடு முழுவதும் இதுவரை 90 பேருக்கு இன்ப்ளூவென்சா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் புதிதாக H3N2 வகை இன்ப்ளூவென்சா வைரஸ் வேகமாக பரவிவருவதாக கூறப்படுகிறது.
இதுவரை 90 பேருக்கு இன்ப்ளூவென்சா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் துணை வகையான H1N1 வைரஸால் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.