இந்த வருடத்தின் மூன்று மாதங்கள் நிறைவடையும் முன்னர் யானை-மனித மோதலில் 14 பேரும் 74 யானைகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வனஜீவராசிகள் பாதுகாப்பு துறை வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனுராதபுரத்தில் 18 யானைகளும், கிழக்கில் 18 யானைகளும், பொலன்னறுவையில் 15 யானைகளும் உயிரிழந்துள்ளன.
கடந்த 2022 ஆம் ஆண்டில், தீர்க்கப்படாத இந்தப் பிரச்சனையால் 145 மனித உயிர்களும் 433 யானைகளும் பலியாகியுள்ளன.