Friday, January 16, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமத்திய வங்கியின் மகிழ்ச்சிகரமான அறிவிப்பு

மத்திய வங்கியின் மகிழ்ச்சிகரமான அறிவிப்பு

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முறை ஏப்ரல் மாதத்திற்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

வணிக கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்த நம்புவதாக அவர் மேலும் கூறினார்.

இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நிதிப் பொதி குறித்த முதலாவது மீளாய்வு 6 மாதங்களில் மேற்கொள்ளப்படும் எனவும் அதற்கு முன்னர் இது தொடர்பான கலந்துரையாடல்கள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதி வரையில் இலங்கைக்கு இந்த நீட்டிக்கப்பட்ட நிதி வசதி கிடைக்கும் என ஊகிக்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles