Wednesday, November 20, 2024
24.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமகனை கூரிய ஆயுதத்தால் தாக்கிய தந்தை கைது

மகனை கூரிய ஆயுதத்தால் தாக்கிய தந்தை கைது

பசறை கோணகலை பகுதியில் மகனை சவரக்கத்தியால் வெட்டிய நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்பத்தகராறு காரணமாக தந்தை மகனை சவரக்கத்தியால் வெட்டியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இடது கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயங்களுடன் மகன் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

49 வயதுடைய தந்தை தனது 18 வயதுடைய மகனை சவரக்கத்தியால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles