வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதற்கான நிதி மற்றும் பாதுகாப்பு வழங்குமாறு கோரி, நிதியமைச்சின் செயலாளருக்கும், பொலிஸ்மா அதிபருக்கும் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அரச அச்சக மா அதிபர் கங்கானி லியனகே இந்த கடிதத்தை அனுப்பியதாக தெரிவித்தார்.
வாக்குச்சீட்டு அச்சிடப்படும் காலப்பகுதியில் பகல் வேளையில் 35 பொலிஸாரும், இரவு வேளையில் 28 பொலிஸாரும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அவசியமாகவுள்ளதாக அவர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் வாக்குச்சீட்டு அச்சிடுவதற்கு தேவையான நிதியை வழங்குமாறு நிதியமைச்சின் செயலாளருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
அதேநேரம், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.