Tuesday, April 22, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநெற்செய்கைக்கான உரத்தை தாங்கிய கப்பல் இலங்கை வருகிறது

நெற்செய்கைக்கான உரத்தை தாங்கிய கப்பல் இலங்கை வருகிறது

நெற்செய்கைக்கு அவசியமான ட்றிப்பல் சுப்பர் பொசுப்பேற்று உரத்துடனான கப்பல் எதிர்வரும் 17 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 36000 மெற்றிக் டொன் அடங்கிய ட்றிப்பல் சுப்பர் பொசுப்பேற்று அடங்கிய உரக்கப்பல் வருகைத்தரவுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் உதவி திட்டத்தின் கீழ் குறித்த உரத்தொகை கிடைக்கப்பெறவுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பொற்றாசியம் மற்றும் பொசுபரஸ் குறைப்பாட்டினால் நெற்கதிகர்கள் மஞ்சல் நிற நோய்க்குட்படுவதை ட்றிப்பல் சுப்பர் பொசுப்பேற்று உரத்தை பயன்படுத்துவது வாயிலாக தடுக்க முடியும் என விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles