நீதிபதிகளின் சம்பளத்தில் இருந்து செலுத்த வேண்டிய வருமான வரி அறவிடுவதை தடுக்கும் உத்தரவை எதிர்வரும் 16ஆம் திகதி வரை நீடிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை வழங்கியதாக கூறப்படுகிறது.
இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம் மற்றும் இலங்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கம் ஆகியன இந்த மனுக்களை சமர்ப்பித்துள்ளன.