Wednesday, July 30, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை அகதிகள் 6 பேர் தமிழ்நாட்டில் கைது

இலங்கை அகதிகள் 6 பேர் தமிழ்நாட்டில் கைது

தமிழ்நாட்டிலுள்ள 3 அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த இலங்கையர்கள் 6 பேர் நியூசிலாந்துக்கு தப்பிச் செல்ல முயன்ற போது இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் படகு மூலம் நியூசிலாந்துக்கு தப்பிச் செல்ல முயற்சித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக பொலிஸாரின் கியூ பிரிவு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் பூம்புகாரில் உள்ள படகு உரிமையாளர் ஒருவரிடம் படகு வாங்க முன்பணம் கொடுத்துள்ளதாக பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர்கள் தூத்துக்குடி மாவட்டம் குளத்துவேப்பட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் கெரவலப்பள்ளி மற்றும் வேலூர் மாவட்டம் குடிமல்லூர் முகாம் ஆகிய இடங்களில் தங்கியிருந்த ஆறு அகதிகள் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles