காலி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பயணித்த படகு ஒன்றின் பணியாளர் ஒருவர் கடலில் விழுந்து காணாமல் போயுள்ளதாக துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹிக்கடுவ தொட்டகமுவ பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
இவர் கடந்த 26ஆம் திகதி சமிர சன் என்ற படகில் மேலும் ஐவருடன் கடலுக்குச் சென்றதாகவும், நேற்று (08) மாலை அவர் கடலில் விழுந்ததாக கப்பலின் உரிமையாளருக்கு தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் தெரியப்படுத்தியதையடுத்து, இதுகுறித்து கப்பல் துறைமுக பொலிஸில் புகார் செய்யப்பட்டது.
இது தொடர்பில் தெற்கு கடற்படை முகாமிற்கு தகவல் வழங்கிய பொலிஸார், காணாமல் போனவரை தேடும் நடவடிக்கையை கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர்.
#Lankadeepa