சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியை பெற்று இன்னும் 05 வருடங்களில் நாட்டை கடன் பொறிக்குள் தள்ள அரசாங்கம் முயற்சித்து வருகின்றது என்பது தெளிவாகின்றது என உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.
சுதந்திர மக்கள் முன்னணியின் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.