Wednesday, November 26, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசந்தேகத்திற்கிடமான முறையில் சிறுமி மரணம் - விசாரணைகள் ஆரம்பம்

சந்தேகத்திற்கிடமான முறையில் சிறுமி மரணம் – விசாரணைகள் ஆரம்பம்

பின்கெல்ல பிரதேசத்தில் வீடொன்றில் 6 வயது சிறுமி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஹிரண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தாய் மற்றும் தாயின் துணையாக இருந்தவர்ருடன் வசித்து வந்த சிறுமி பல நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும், மருத்துவ உதவி வழங்கப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமி இதற்கு முன்னர் பல தடவைகள் தாய்க்கு துணையாக இருந்தவரால் உடல்ரீதியாக தாக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடுள்ள குறித்த சிறுமியின் உடலில் பல தழும்புகள் மற்றும் வீக்கங்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மரணம் தொடர்பாக குழந்தையின் 25 வயது தாயும், தாய்க்கு துணையா இருந்த 29 வயதானவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மரணம் தொடர்பான நீதவான் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles