புதிய மின்சார உற்பத்தித் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் உட்பட அனைவரும் ஆதரவளித்தால் எதிர்வரும் ஜூலை மாதம் மின் கட்டணத்தை குறைக்க முடியும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று (08) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மின்சார கட்டணம் தொடர்பில் நிலையியற் கட்டளையின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.