Sunday, August 10, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅம்பலாந்தோட்டையில் 7 மணிநேர நீர்வெட்டு

அம்பலாந்தோட்டையில் 7 மணிநேர நீர்வெட்டு

அம்பலாந்தோட்டை நீர் வழங்கல் திட்டத்திற்குட்பட்ட மிரிஜ்ஜவில நீர்த்தாங்கி மூலம் நீர் விநியோகிக்கப்படும் குழாயில் அத்தியாவசிய திருத்த வேலைகள் காரணமாக நாளை 09ஆம் திகதி (09) வியாழக்கிழமை மு.ப. 9 மணி முதல் பி.ப. 4 மணி வரையிலான 7 மணிநேர நீர் விநியோகத்தடை பின்வரும் பகுதிகளில் அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

மிரிஜ்ஜவில, சிசிலசகம, கொயம் கொலமுல்ல, அவஸ்கோன் வீதி, சித்ராகல, கஜுகெவிபல வீதி, ஓசியஸ் வீதி, சமகி மாவத்தை, கொடவாய, ரொட்டவெல, நவகம்கொட, ரொட்டலவெவ, கப்புவத்தை, லேவாய, கிரேண்ட்ஹில்லா ஹோட்டல் வீதி, மானச்சா, ஹுணுகொட்டுமுல்ல வீதி, துறைமுக உள்ளக பிரதேசங்கள் மற்றும் தர்மபால மாவத்தை ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும்.

இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கவலை தெரிவிப்பதோடு, நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles