Tuesday, July 15, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலங்களாக மீட்பு

வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலங்களாக மீட்பு

வவுனியா குட்ஷெட் வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து தாய், தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இன்று (07) காலை சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தந்தையே இரண்டு பிள்ளைகளையும் மனைவியையும் கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தந்தைக்கு 41 வயதும், தாயாருக்கு 36 வயதும், உயிரிழந்த மகள்களுக்கு 9 மற்றும் 3 வயது என்றும் தெரியவந்துள்ளது.

இரண்டு குழந்தைகளின் சடலங்கள் வீட்டில் இரண்டு நாற்காலிகளிலும், மனைவியின் சடலம் படுக்கையறையிலும் கண்டெடுக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles