Friday, July 4, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாதாள உலக பேர்வழியுடன் சிங்கள நடிகை தொடர்பு?

பாதாள உலக பேர்வழியுடன் சிங்கள நடிகை தொடர்பு?

போதைப்பொருள் வியாபாரி ஒருவருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் இலங்கையின் பிரபல நடிகை ஒருவருக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகச் செயற்பாடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஹைப்ரிட் சுத்தா என்ற சமீர ரசங்க குணசேகர என்பவரால் கொள்வனவு செய்யப்பட்ட வீடொன்றின் விசாரணைக்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் கடந்த வெள்ளிக்கிழமை (3) அவருக்கு அழைப்பு விடுத்ததாகவும், ஆனால் குறித்த நடிகை அன்றைய தினம் பிரசன்னமாகாததால் இந்த வாரம் மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இவருக்கு தென் மாகாணத்தில் வீடொன்றும் பிலியந்தலை பிரதேசத்தில் வீடொன்றும் இருப்பதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

ஹைப்ரிட் சுத்தா புளூமெண்டலில் நடந்த பேரணியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

#Aruna

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles