குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் கலைஞர்களுக்காக புதிய வீடுகளை நிர்மாணிக்க நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கலைஞர்கள் மற்றும் குறைந்த வருமானங்களை பெறுவோருக்காக 1996 வீடுகளை நிர்மாணிக்க அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தம் அடுத்த வாரமளவில் சீனாவுடன் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடமைப்பு திட்டத்திற்காக சீனா 29 மில்லியன் ரூபாவை வழங்கவுள்ளது.
பேலியகொடை, தெமட்டகொடை, கொட்டாவ, மஹரகம மற்றும் மொரட்டுவ ஆகிய இடங்களில் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.