இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிப்பதாக சர்வதேச நாணய நிதியத்திற்கு சீனா உறுதிமொழியை வழங்கியது.
இதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் டொலர் உதவியை இலங்கை பெறுவதற்கான தடை நீங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ப்ளூம்பெர்க்கின் செய்தியின்படி, மார்ச் 6 ஆம் திகதி சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி மூலம் கடன் மறுசீரமைப்பிற்கு சீனா எழுத்துப்பூர்வ ஆதரவை வழங்கியுள்ளது.
சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியின் கடிதம் சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளதாக விடயம் அறிந்தவர்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் ஏற்கனவே தேவையான உத்தரவாதங்களை வழங்கியுள்ளன.