Saturday, November 1, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமனைவியை கொலை செய்த கணவன் கைது

மனைவியை கொலை செய்த கணவன் கைது

ஊரகஸ்மன்ஹந்திய, பருஸ்ஸகொட, மஹுரகஹ பிரதேசத்தில் நேற்று (05) பிற்பகல் நபர் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

34 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் மீன் வியாபாரி என்பதுடன், அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் இன்று (06) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊரகஸ்மன்ஹந்திய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles