Saturday, November 1, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டு'பூரு மூனா'வுக்கு அடைக்கலம் வழங்கிய தம்பதி கைது

‘பூரு மூனா’வுக்கு அடைக்கலம் வழங்கிய தம்பதி கைது

தப்பியோடிய பாதாள குழு உறுப்பினரான ‘பூரு மூனா’வுக்கு அடைக்கலம் வழங்கிய தம்பதியினரை, ​​பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த தம்பதியினர் நுவரெலியா பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் தப்பிச் சென்ற காரை பொலிஸார் நுவரெலியா பிரதேசத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதுடன்இ கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடற்படை சிப்பாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தம்பதியினர் மில்லனிய பிரதேசத்தில் வசிப்பவர்கள் என தெரியவந்துள்ளது.

டிசெம்பர் 18ஆம் திகதி ஹங்வெல்ல பிரதேசத்தில் உணவக உரிமையாளரை சுட்டுக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த ‘பூரு மூனா’ சந்தேக நபர்களான தம்பதியினரின் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

கடந்த 24ஆம் திகதி தம்பதியினருடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்ற ‘பூரு மூனா’ என்பவர் போலியான பெயரில் டுபாய் செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டார்.

அவர் கைது செய்யப்பட்ட பின்னர், சந்தேகத்திற்குரிய கடற்படை சிப்பாய் மற்றும் அவரது மனைவி தலைமறைவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles