Saturday, September 13, 2025
28.9 C
Colombo
செய்திகள்உலகம்பாகிஸ்தான் குண்டுத்தாக்குதலில் 9 பொலிஸ் அதிகாரிகள் பலி

பாகிஸ்தான் குண்டுத்தாக்குதலில் 9 பொலிஸ் அதிகாரிகள் பலி

தென்மேற்கு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் 9 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.

பலுசிஸ்தான் மாகாணத்தின் சிப்பி நகரில் பொலிஸார் பயணித்த வாகனம் மீது இந்த குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் காவல்துறையினர் பயணித்த வாகனம் மீது தற்கொலை குண்டுதாரி தனது உடலில் குண்டுகளை கட்டிக்கொண்டு உந்துருளியில் வந்து மோதியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குண்டு வெடித்ததில், 9 காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்ததுடன், 15 பேர் காயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரிகள் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles