Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உலகம்கொவிட் தடுப்பூசியை கண்டுபிடித்த ரஷ்ய விஞ்ஞானி மர்ம மரணம்

கொவிட் தடுப்பூசியை கண்டுபிடித்த ரஷ்ய விஞ்ஞானி மர்ம மரணம்

கொரோனாவுக்கு எதிராக ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை ரஷ்யாவை சேர்ந்த 18 அறிவியல் விஞ்ஞானிகள் கடந்த 2020-ம் ஆண்டு கண்டுபிடித்தனர்.

18 பேர் கொண்ட அந்த அறிவியல் விஞ்ஞானிகள் குழுவில் ஆண்ட்ரி போட்டிகோவ் (47) என்ற விஞ்ஞானி ஒருவரும் இருந்தார்.

இந்நிலையில், அவர் அண்மையில் அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிஸார் அண்டிருவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவரை கொலை செய்துவிட்டு தப்பியோடியதாக சந்தேகிக்கப்படும் 29 வயது நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

வைரஸ் குறித்த ஆராய்ச்சியாளரான ஆண்ட்ரி கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி தடுப்பூசியை கண்டுபிடித்ததற்காக அவருடன் சேர்ந்து மொத்தம் 18 அறிவியல் விஞ்ஞானிகளுக்கு கடந்த 2021ம் ஆண்டு ரஷ்ய ஜனாதிபதி புதின் நாட்டின் உயரிய விருதை வழங்கி கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles