Saturday, September 13, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇவ்வாரம் முட்டை இறக்குமதி செய்யப்படுமாம்

இவ்வாரம் முட்டை இறக்குமதி செய்யப்படுமாம்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு முட்டைகளை இறக்குமதி செய்வதன் மூலம் பறவைக் காய்ச்சல் போன்ற நோய்கள் நாட்டுக்குள் நுழையும் அபாயம் இல்லை என அரச வர்த்தக பல்வேறு சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல முட்டைகள் குறித்து தற்போது சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அந்த சோதனைகளை மேற்கொள்ளும் முறையால் முட்டைகளை இறக்குமதி செய்வதில் சிறிது காலதாமதம் ஏற்பட்டதாக அரச வர்த்தக பல்வேறு சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

கால்நடை வளத் திணைக்களம் வழங்கிய பரிந்துரைகளின் பிரகாரம் இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அடுத்த சில தினங்களில் பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles