அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இது ஒரு தோல் புற்றுநோய் அறுவை சிகிச்சை என்றும் பெப்ரவரி 16 அன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்றும் வெள்ளை மாளிகை வைத்தியர் கெவின் ஓ’கானர் கூறினார்.
பைடனின் மார்புப் பகுதியில் இந்தப் புற்றுநோய் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஜனாதிபதி ஜோ பைடனுக்கு வொஷிங்டனில் உள்ள வால்டர் ரீட் இராணுவ மருத்துவ மையத்தில் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
தற்போது அவர் முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும், மேற்கொண்டு சிகிச்சை தேவையில்லை என்றும் வைத்தியர் ஓ’கானர் கூறியிருந்தார்.