Friday, October 31, 2025
25 C
Colombo
செய்திகள்உலகம்அமெரிக்காவில் துப்பாக்கி சூடு : 2 பேர் பலி - 6 பேர் படுகாயம்

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு : 2 பேர் பலி – 6 பேர் படுகாயம்

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் டக்ளஸ் கவுன்டி பகுதியில் வீடு ஒன்றில் விருந்து நிகழ்ச்சி இடம் பெற்றுள்ளது.

அந்த வீட்டின் உரிமையாளர் தனது மகளுக்காக ஸ்வீட் 16 என்ற பெயரிலான விருந்து நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.

16 வயது நிறைவடைந்ததும் அவர்கள் வயதுக்கு வந்தவர்கள் என அமெரிக்காவில் கணக்கில் கொள்ளப்படுகின்றது. அந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள், இளம்பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

இந்நிலையில், திடீரென அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது துப்பாக்கி சூடு நடந்துள்ளது.

இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் காயமடைந்துள்ளனர். பலர் காயங்களுடன் வீட்டுக்கு வெளியே ஓடி தப்பியுள்ளனர்.

இது குறித்து வீட்டு உரிமையாளர் தெரிவிக்கையில்,

விருந்து நிகழ்ச்சியை இரவு 10 மணியளவில் முடித்து விட வேண்டும் என திட்டமிட்டு இருந்தோம். விருந்தில் கலந்து கொண்ட இளைஞர்களில் சிலர், மரிஜூவானா என்ற போதை பொருளை புகைத்தபடி இருந்தனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த விருந்தில் இளைஞர்கள் அல்லாத வேறு யாரும் கலந்து கொண்டனரா? என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

குறித்த பகுதியை பொலிஸார் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles