முட்டை ஏற்றிய கப்பல் நாட்டுக்கு வருவதாக தெரிவித்த போதிலும், இதுவரை அவ்வாறானதொரு கப்பல் நாட்டுக்கு வரவில்லை என அகில இலங்கை கோழி பண்ணையாளர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
அதன் சிரேஸ்ட ஆலோசகர் மாதலி ஜயசேகர கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
முட்டை இறக்குமதியில் ஈடுபடாத நிலையில், பாரிய முட்டை களஞ்சியசாலைகளில் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தமது இயலாமையை மறைத்து, களஞ்சியசாலைகளில் உள்ளவர்களை அச்சுறுத்தி அவர்களுக்கு அபராதம் விதித்து முட்டைகளை வெளியேற்ற முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டார்.