ஹபராதுவ – ஹிட்டியனகல – தல்பே மற்றும் பிடிதுவ பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 16 கிலோவிற்கும் அதிகமான குஷ் போதைப்பொருளுடன் 4 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹபராதுவ பொலிஸார் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் 21 வயதுக்கும் 46 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் இன்று காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
