எரிபொருள் உற்பத்தி செலவு மற்றும் அதன் விற்பனை இலாப விபரங்களை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர வெளியிட்டுள்ளார்.
இதன்படி இலங்கைப் பெட்ரோலிய கூட்டுத்தாபனம், பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் ஊடாக அதிக இலாபத்தை ஈட்டுகின்றமை தெரியவந்துள்ளது.
ஒருலீற்றர் 95 ஒக்டேன் பெட்ரோல் ஊடாக 110.35 ரூபாவும், 92 ஒக்டேன் பெட்ரோல் ஊடாக 26.38 ரூபாவும் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இலாபமாக ஈட்டுகிறது.
ஒட்டோ டீசல் ஊடாக 4.73 ரூபாவும், சுப்பர் டீசல் ஊடாக 12.90 ரூபாவும் இலாபமாக ஈட்டப்படுகிறது.
மண்ணெண்ணெய் விலை குறைக்கப்பட்டிருந்தாலும், அதன் ஊடாக 3.63 ரூபா இலாபமாக ஈட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
