Thursday, June 12, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெங்காயம் - உருளைக் கிழங்கு விலைகள் குறைந்தன

வெங்காயம் – உருளைக் கிழங்கு விலைகள் குறைந்தன

புறக்கோட்டை மொத்த சந்தையில் பெரிய வெங்காயம் கிலோவொன்றின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன்படி, பெரிய வெங்காயம் கிலோவொன்றின் மொத்த விலை 95 ரூபாவாக காணப்படுவதாக அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் பெரிய வெங்காயம் கிலோ ஒன்றின் மொத்த விலை 130 ரூபாவாக காணப்பட்டது.

இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு கிலோவொன்றின் விலையும் குறைவடைந்துள்ளது.

கடந்த வாரம் 150 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட உருளைக்கிழங்கு கிலோவொன்று தற்போது 130 ரூபாவாக குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் வெள்ளை சீனி கிலோவொன்றின் மொத்த விலை 220 ரூபாவாக காணப்படுவதாக அந்த சங்கம குறிப்பிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles