Sunday, August 10, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுற்று நோயாளர்களிடம் பண மோசடி செய்த நபருக்கு 6 மாத கடூழிய சிறை

புற்று நோயாளர்களிடம் பண மோசடி செய்த நபருக்கு 6 மாத கடூழிய சிறை

புற்றுநோயாளிகள் இருவரின் வங்கிக் கணக்கில் பணத்தை ஏமாற்றி சுமார் மூன்று இலட்சம் ரூபாவை மோசடி செய்த இளைஞர் ஒருவருக்கு ஹொரணை நீதவான் சந்தன கலன்சூரிய நேற்று (01) தண்டனை விதித்தார்.

புற்று நோயாளர்களின் சிகிச்சைக்கான பணத்தை மோசடி செய்த குற்றத்திற்காக பிரதிவாதிக்கு தண்டனை வழங்கப்படுவதாக தீர்ப்பை அறிவித்த மாஜிஸ்திரேட் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இரண்டு புற்று நோயாளர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறும் பிரதிவாதிக்கு மேலதிக 6 மாத கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சமூக ஊடகப் பிரிவு குற்றவாளிகளுக்கு எதிராக இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது.

புற்றுநோய் சிகிச்சைக்கு உதவி கோரி வெளியான விளம்பரத்தின் பிரகாரம், சந்தேகநபர் இரண்டு புற்றுநோயாளிகளின் வங்கிக் கணக்குகளில் பணத்தை மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles