Monday, August 4, 2025
25 C
Colombo
செய்திகள்உலகம்ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 32 பேர் பலி

ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 32 பேர் பலி

க்ரீஸ் நாட்டில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்தனர்.

க்ரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி நகரத்திற்கு இன்று 350 பயணிகளுடன் ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது.

லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தவேளை அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரயில் ஒன்று மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.

இரு ரயில்களும் நேருக்கு நேர் மோதியதால் ரெயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கவிழ்ந்து தீ பற்றி எரிந்துள்ளது.

இந்த கோர விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததுடன்இ மேலும் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளினை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles