Friday, August 29, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாட்டின் பணவீக்கத்தில் வீழ்ச்சி

நாட்டின் பணவீக்கத்தில் வீழ்ச்சி

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) மூலம் அளவிடப்படும் முதன்மை பணவீக்கம் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரியில் சிறிதளவு குறைந்துள்ளதாக குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த ஜனவரியில் 51.7% ஆக இருந்த முதன்மை பணவீக்கம் பெப்ரவரி இறுதிக்குள் 1.1% ஆல் குறைந்து 50.6% ஆக பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், ஜனவரியில் 60% ஆக இருந்த உணவு பணவீக்கம், பெப்ரவரியில் 54.4% ஆகக் குறைந்துள்ளது. ஒப்பீட்டளவில் இந்த பணவீக்கம் 5.6% ஆல் குறைந்துள்ளதாக குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், ஜனவரி மாதத்தில் 47.9% ஆக பதிவான உணவு அல்லாதவற்றின் பணவீக்கம் பெப்ரவரயுடன் உடன் ஒப்பிடுகையில் 0.9 சதவீத்தினால் அதிகரித்து, 48.8% ஆக பதிவாகியுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles