தேர்தல் ஒன்று நடைபெறும் வரையில் ஜனாதிபதி பதவியிலோ அல்லது பிரதமர் பதவியிலோ எந்த எவ்வித மாற்றங்களும் ஏற்பட மாட்டாது என்று தான் பொறுப்புடன் கூறுவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (28) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடியான நிலையில், அதனை திசை திருப்புவதற்கு இவ்வாறான விடயங்களை கூறுவது நியாயமானது அல்ல என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.