வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, துறைமுகம், மின்சாரம், எரிபொருள், மருத்துவம் மற்றும் வங்கித்துறை உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் ஈடுபடும் 40 தொழிற்சங்கங்கள், இன்றைய தினம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுகின்றன.
இதன் காரணமாக, இன்றைய தினம் பல்வேறு சேவைகள் முடங்கும் என பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்ற தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவளிக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று தீர்மானித்தது.
எனினும், மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை, ரிஜ்வே சிறுவர் சீமாட்டி வைத்தியசாலை, காசல் வைத்தியசாலை, சிறுநீரக நோய் வைத்தியசாலை உள்ளிட்ட சில வைத்தியசாலைகளில் இந்தப் பணிப்புறக்கணிப்பு இடம்பெறாது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.