இலங்கையின் வளித்தர சுட்டெண் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் இன்று வளிமண்டலம் அதிகமாக மாசடைந்துள்ளது.
அதன் வளித்தர சுட்டெண் 126ஆக குறிப்பிடப்பட்டுள்ளது.
கண்டி – 111
ஹம்பாந்தோட்டை – 106
கொழும்பு – 89
காலி – 91
குருணாகலை – 103
எம்பிலிபிட்டிய – 100
101 தொடக்கம் 150 வரையான வளித்தர சுட்டெண்ணை கொண்டுள்ள பிரதேசங்கள், சிறுவர்கள், முதியவர்கள், சுவாச கோளாறு உள்ளவர்களுக்கு ஆபத்துமிக்கதாகும்.
அங்கு வசிக்கின்ற பாதிக்கப்பட கூடிய தரப்பினர் முககவசம் அணிந்துகொள்வது பாதுகாப்பானது என வைத்தியர்கள் பரிந்துரைக்கின்றனர்.