Monday, August 11, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுற்றுநோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க புதிய வைத்தியசாலைகள்

புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க புதிய வைத்தியசாலைகள்

புற்று நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக விசேட வைத்தியசாலைகளையும், நவீன வசதிகளுடனான சிறுவர்களுக்குரிய வைத்தியசாலை ஒன்றினையும் நிர்மாணிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் குறித்த ஆலோசனையை ஜனாதிபதியின் செயலாளர் ஈ எம் எஸ் பி ஏக்கநாயக்கவினால் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை, பதுளை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் புற்றுநோய்க்கான வைத்தியசாலைகளையும் பொருத்தமான இடத்தில் சிறுவர்களுக்கான வைத்தியசாலை ஒன்றையும் நிர்மாணிப்பதற்குரிய ஆலோசனையே வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles