Wednesday, August 6, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாதாள குழு உறுப்பினரை காப்பாற்றிய தேரர்கள் உட்பட மூவர் கைது

பாதாள குழு உறுப்பினரை காப்பாற்றிய தேரர்கள் உட்பட மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸாரின் காவலில் இருந்தபோது பல கொலைகளுடன் தொடர்புடைய குற்றவாளியை மீட்டு அழைத்துச் சென்றதாகக் கூறப்படும் பிக்குமார்கள் இருவரும், கார் சாரதியும் ஹெட்டிபொல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக மேல்மாகாண தென் குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்கள் பயன்படுத்திய காரையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதன்படி ஹெட்டிபொல ரிட்டதெனிய விகாரையின் தலைவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

11 வயதான சாமனேர தேரரின் பாதுகாப்பிற்காக பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட காரில் இருந்து டுபாய்க்கு தப்பிச் செல்ல வந்த சந்தேகநபரின் இரண்டு பயணப் பொதிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles