பாணந்துறை – பிங்வத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சிற்றூந்து ஒன்றில் சென்றுக்கொண்டிருக்கையிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் தப்பிச்சென்றுள்ளதுடன், அவரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.