நாளை பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து பாரிய போராட்டத்துக்கு தயாராகி வருவதுடன், அதில் கல்வித்துறை சார்ந்தவர்களும் பங்குகொள்ளவுள்ளனர்.
எவ்வாறாயினும் போராட்டத்தினால் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படாது என இலங்கை ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
வரிக்கொள்கை உள்ளிட்ட விடயங்களுக்கு எதிராக இந்த போராட்டம் இடம்பெறுகிறது.
இந்தநிலையில், கல்வி சமூகம் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கறுப்பு பட்டியணிந்து பாடசாலைகளுக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது.